இரவுநிலவில் இதயராட்டினம் சுற்றிய கதை,

கண்ணன், பருவ மழையில் பெய்தோடும் பேராற்றின் வயது இவனுக்கு, கரையில் நின்று கடலை பார்பதாய் இவன் இந்த உலகத்தை பிரம்மிப்போடும், பெரும் நேசத்தோடும் பார்க்கிறான். பயணத்தை துளித் துளியாய் ரசிப்பவன் வாரம் முழுக்க வேலை செய்துவிட்டு வாரக் கடைசியில் வீடு சென்றோடி திரும்பும் இளம்தனியன், பெரும் காதலன். தனியனாக இருப்பதால், தவறைத் திருத்திக் கொள்ளும் பக்குவம் வர முயன்று கொண்டே, அம்முயற்சியை கை விடாமல் இருப்பவன். காதலுக்காக அவ்வப்போது காதல் கவிதைகள் வாங்கி வாசிக்கும் பழக்கம் கொண்டவன், …

இரவுநிலவில் இதயராட்டினம் சுற்றிய கதை,-ஐ படிப்பதைத் தொடரவும்.

உன்னை நான் காதலிக்கிறேன் உனக்குத் தெரியாமல் மாயா,

மானே மாயா, எங்கோ தூரத்தில் தெரியும் உனது ஒளிமயமான முகத்தை நான் ஓயாது உற்று ரசிக்கிறேன் மாயா;அந்த ரம்மியமான காட்சியில் இமைகள் மூட மறுதலிக்கின்றன;விழியுள் மொட்டுகள் விரிகின்றன அவ்வகைபூக்கு என்னைப் போல ஒரு வண்டின் பெயரையே சூட்டலாம் மாயா;உனது பற்களுக்கிடையில் மாட்டிக் கொண்ட பாப் கார்னாய் கடைந்து வெளியேறி உன்னத வலியை உடைந்து உணர்கிறேன் மாயா, உடையில்லாத உன் உதட்டில் ஒட்டிக் கொள்கிறேன். நாவாய் கொண்டு சுழட்டுகையில் மாயா உன்னோடு உடன் நானும் வரப் பார்க்கிறேன் ஓர் …

உன்னை நான் காதலிக்கிறேன் உனக்குத் தெரியாமல் மாயா,-ஐ படிப்பதைத் தொடரவும்.

அப்பாவும் அந்த இரவும்,

அப்பாவின் குடிப்பழக்கத்தை அருகிலிருந்து பார்த்தவன் நான், அந்த வாசம் இப்போது நுகர்ந்தாலும் அப்பா ஞாபகத்துக்கு வந்து விடுவார்; அன்றாடம் பொழுது சாய்கையில்அப்பாவும் சாய்ந்து விடுவார், போதையில் புதைந்த அப்பாவை, கைகளை அணைத்து இழுத்து வருவது இவனது தினசரி மாலை வேலை; அந்த கைகள் அவ்வளவு முரண்டு பிடிக்கும்! மூக்குநாண் கயிறற்ற காளை போல! இருந்தும் அந்த கைகளின் பலம் இவனுக்குள்ளையும் இருப்பதாய் உணர்கிறான், சமாளிக்கிறான்; அப்பாவின் சட்டை ஈரமாகி அங்கங்கு நனைந்து இருக்கும்; அப்பனின் உழைப்பு அப்படி! …

அப்பாவும் அந்த இரவும்,-ஐ படிப்பதைத் தொடரவும்.

அப்பாவும் அதிகாலை தேநீரும்,

அப்பாவின் அதிகாலை முழிப்பு அவ்வளவு புத்துணர்வு நிறைந்தது; அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விடுவார்; அவை இரவு போதையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் அல்லது பகல் வேலையின் பக்தியாகவும் இருக்கலாம்; அப்பா எழுந்தவுடன் அவனைத்தான் எழுப்புவார் அதற்க்கு முன்பாக அவன் தூக்க காதுகளில் அம்மாவின் பெயர் ஒரு இருபது முறை ஒலித்திருக்கும்; அதுவும் காதல்மொழி நடையில், அந்தக் குரல் ஒன்றும் அம்மாவுக்கு புதிது இல்லை தான், ஆனால் இவனுக்கு புதிது என இப்போதும் சொல்லிக் கொண்டு அம்மாவிடம் சிரிப்பான், …

அப்பாவும் அதிகாலை தேநீரும்,-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேநீர் அரும் பிரியர்களுக்கு,

தேநீர் சுவையானவை, கதகதப்பானவை; மிதக்கும் மொட்டிலிகளாய் வெடித்து வெடித்து, பாத்திரம் நுனிவரை நுரைத்து நுரைத்து, உயர எழுந்து விழுந்து கொதித்தவை. பாத்திரத்தில் இருந்தவாறே பக்கத்தவர்களை சென்றடையும், மாயவாசனையோடு வளர்ந்தவை. உடம்பொடு உயிரிடை போலவை உலர்ந்த தேயிலையும் வெந்நீரும், பால் சேர்த்தல் பாலுக்கும், பார்ப் போருக்கும் நல்லவை, புசி பவருக்கு புத்திவேண்டும் சுடச்சுடத் தொடும் அளவிற்கு நாவிற்கு நெருக்கம், தொடத்தொட வேண்டுமளவிற்கு மூளைக்குப் பிரியம், உடலுக்கு உணர்வாம்! உயிர்க்கு மழையாம்! காற்றில் மிதந்து வந்து, காதலால் தீண்டும் தேசாந்திரி! …

தேநீர் அரும் பிரியர்களுக்கு,-ஐ படிப்பதைத் தொடரவும்.

பார்த்த மயக்கம், மறுபடியும்

சில சமயங்களில் உங்களுக்கு பிடித்தமானர்களை சந்திக்க நேரிடும், அதுவும் கண்ணோடு கண் மோத நேரும், அந்த நிகழ்வை கண்டு அஞ்சாதீர், ஆம்நிறைய நேரங்கள் உங்கள் கண்கள் விழுங்கிய காட்சி அல்லவா,அதற்கு அந்த எதிர் கண்களே சாட்சி;பார்த்து பிடித்த பிம்பம் அல்லவா,அதற்கு அந்த ஒளியே சாட்சி;காத்து  தீண்டா நிழல் அல்லவாஅதற்கு அந்த நிஜமே சாட்சிசேர்த்து வடித்த கனவல்லவாஅதற்கு அந்த  பொழுதே சாட்சிகண்கள் திகைக்கும் பொழுதுஎண்ண ஓட்டம் என்னவாக இருக்கும், அது ஒருபோதும் நம்பாததாக இருக்கும், ஒரு அது ஒரு …

பார்த்த மயக்கம், மறுபடியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மெளன மொழியாள்,

இரவுகள் அதற்கான பணிகளைசெய்து கொண்டிருக்கையில்,அந்த நேரம் எனது உடல் முழுதும்ஒரு ஒளி பரவிக் கொண்டிருக்கிறது,அந்த ஒளியின் பிரிகை எனது அணுக்களின் வேகத்தை தொய்வின்றி உயர்த்திச் செல்ல,அதனோடு சேர்ந்தேஎரியும்நியூரான் நனைகிறது,அந்த மோக மழையில்,கண்கள் அலைமோதும்,கைகள் அசைந்து தலைக்கு வரும்,எனது பார்வைகள் ஒரு அழகியல் தேடி தாகம் எழும்பொழுது,அந்த பேருருவம் பார்த்துபரவசம் கொள்ளும் நிலை வாய்க்கப்பெற்றது , ஏதோ சத்தம் சட்டென்று செவியில் இடிக்க, ஆம் அந்த விண்சிரிப்பின் பெரும் வெடிப்பு நிகழ்கிறது அதில் மிதக்கும் மேகங்கள் வரிசையாக நிற்கின்றன …

மெளன மொழியாள்,-ஐ படிப்பதைத் தொடரவும்.

தகத்தாய ஆதவன்,

உலகம் சுற்றும் ஓர் இளைஞன்உயிர்கள் நனையும் இவனிடம்உடல்கள் நாணும் இவனிடம்விதைகள் வேர்விடும்காய்கள் கணியும்இவன் பார்த்தால்ஐயய்யோஇவன் பார்வையில் விழாதோர் உண்டோஇவன் பார்வையில் எழாதோர் உண்டோஅட தினமும் என்னை தீண்டும் திகம்பரன்என்தினமும் நான் தேடும் பரமன்எண்திசைகள் இவனுக்கு தடையல்லஎவ்விசையும் இவனுக்கு ஈடில்லதன்னுள் தன்னை எரித்துஎல்லாம் எல்லாம் செய்யும்இவன் தந்திரம்,இராச தந்திரம்,துருவங்கள் எல்லாம் இவன் பார்வைக்கு ஏங்கும்திரவங்கள் எல்லாம் இவன் பார்வைக்கு உருகும்நாளை என்ற பொக்கிசத்தை வைத்திருக்கும் சூனியகாரன். உன்னைத் தேடும் இன்பம் கோடிஉன்னை நாடும் வரம்வேண்டி ♥️ ஆனாலும், இவன் …

தகத்தாய ஆதவன்,-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்மா,

அம்மா என்னும் பேராளுமை உள்ளுக்குள்ளே பிறந்த தருணம், உதிரத்தில் உயிரை உணர்ந்தப் பின், ஊனுடலை தனித்துப் பேணுவதில் தீரா பேரார்வம், தன்னை அறியாமலே தசைகலெல்லாம் வலுப்பெறும், தன்னால் பெறப்போகும் அவள்/அவன் நகலின்மேல் பெரும்கர்வம், பேராண்மை, தன்தலைவன் தந்த உயிரை ஓர் உருவாக்கி, உடலாக்கி, மண்ணுக்கு கொண்டு வர அவள் எத்தனித்து எடுக்கும் எல்லா முடிவுகளும் ஓர் உலகப்போர், அவள் நடத்தும் தவப் போராட்டங்களும், தினப் பேராட்டங்களும் தன்வலி உயர்த்தும், மெய்வலி உணர்த்தும். அவளுக்கு தீராக்காதல் தலைவனுக்கு பிறகு, …

அம்மா,-ஐ படிப்பதைத் தொடரவும்.